காணொளி: இத்தாலியில் எரிமலை வெடித்த போது பனிச்சறுக்கு செய்த வீரர்கள்
காணொளி: இத்தாலியில் எரிமலை வெடித்த போது பனிச்சறுக்கு செய்த வீரர்கள்
இத்தாலியின் சிசிலியில் உள்ள எட்னா எரிமலை பனியால் மூடப்பட்டிருந்த போது வெடித்தது. அப்போது, பெரிய அளவில் சாம்பலும் புகையும் வெளியேறியது. இருப்பினும் எரிமலையின் சரிவுகளில் சிலர் பனிச்சறுக்கு செய்தனர்.
அடிக்கடி வெடித்துச் சிதறும் இந்த எரிமலையின் செயல்பாடு தற்போது தீவிரமடைந்துள்ளதாகவும், அதன் பள்ளங்களிலிருந்து தொடர்ந்து சாம்பல் வெளியேறி வருவதாகவும் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலை ஆய்வு நிறுவன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



