காணொளி : அதிமுகவுக்குள் நடக்கும் சர்ச்சை என்ன? - முழு விவரம்
கடந்த சில நாட்களாகவே அதிமுக உட்கட்சி விவகாரங்கள் பொதுவெளியில் பேசப்பட்டு வருகின்றன. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற எல்லா அணிகளையும் ஒன்றிணைக்க கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முயற்சி எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன் பிறகு, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா மற்றும் பாஜகவினரும் அந்த கருத்துக்கு ஆதரவு தரும் தொனியில் பேசியிருந்தனர்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரனையோ, ஓ.பன்னீர்செல்வத்தையோ தான் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் டெல்லியில் பாஜக முக்கியத் தலைவர்களில் ஒருவரான உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் அதிமுக உட்கட்சி விவகாரம் விவாதிக்கப்படவில்லை என்று எடப்பாடி கூறினாலும், அது பேசப்பட்டதற்கான வலுவான வாய்ப்புகள் இருப்பதாக ஊகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அதிமுகவுக்குள் என்ன நடக்கிறது என்பது குறித்து இந்த காணொளி விளக்குகிறது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



