காணொளி: கீழே விழும் அபாயத்தில் பழமையான பதுங்கு குழி
காணொளி: கீழே விழும் அபாயத்தில் பழமையான பதுங்கு குழி
இந்த அணுசக்தி பதுங்குக்குழி விரைவில் சரிந்து விழும் நிலையில் உள்ளது.
இந்த கட்டடம் சுமார் 70 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது.
அணு ஆயுத போர் ஏற்பட்டால் அப்போது கண்காணிப்பு நிலையமாக பயன்படுத்த இந்த கட்டடம் உருவாக்கப்பட்டது. இந்தப் பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு உள்ளூர் நிர்வாகம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த பதுங்குகுழி அமைந்துள்ள வடகிழக்கு இங்கிலாந்தின் கிழக்கு யார்க்ஷையர், பிரிட்டனில் மிக வேகமாக கடல் அரிப்பு ஏற்படும் பகுதிகளில் ஒன்றாகும்.
காலநிலை மாற்றம் காரணமாக உருவாகும் கடல் அரிப்பை, உலகளாவிய அபாயமாக ஐ.நா. குறிப்பிடுகிறது.
சில கணிப்புகளின் படி, 2100ஆம் ஆண்டுக்குள் உலகின் மணல் நிறைந்த கடற்கரைகளில் பாதி வரை காணாமல் போகலாம் என சில கணிப்புகள் கூறுகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



