காணொளி: செயற்கையாக உருவாக்கப்பட்ட பனிச்சரிவு?

காணொளிக் குறிப்பு, செயற்கையாக உருவாக்கப்பட்ட பனிச்சரிவு ஏன்?
காணொளி: செயற்கையாக உருவாக்கப்பட்ட பனிச்சரிவு?

ரஷ்யாவின் உயரமான மவுண்ட் எல்ப்ரஸ் மலையில், செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட பனிச்சரிவின் காட்சி இது.

அந்தப் பகுதியில் ஏற்பட்ட அதிகப்படியான பனிப்பொழிவால் குவிந்த பனியை அகற்றுவதற்காக அதிகாரிகள் திட்டமிட்டு இந்த பனிச்சரிவை ஏற்படுத்தினர்.

பனி மலை உச்சியிலிருந்து கீழே சரிந்து கார் நிறுத்தும் இடங்கள், கட்டடங்கள் மற்றும் சாலைகளை மூடியது போல தெரிந்தது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு