ரஷ்யா, இரானை குறிவைத்தால் கச்சா எண்ணெய் விலை உயருமா?

காணொளிக் குறிப்பு,
ரஷ்யா, இரானை குறிவைத்தால் கச்சா எண்ணெய் விலை உயருமா?

இந்த ஆண்டு கச்சா எண்ணெய் விலை உயரப் போகிறதா? போக்குவரத்து, உணவுக்கு நாம் அதிக விலை கொடுக்கப் போகிறோமா? இதை நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது.

ஆனால் பின்வரும் விஷயங்கள் இதன் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ரஷ்யா மற்றும் இரான் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதன் மூலம் பெரும் தொகையை ஈட்டுவதைத் தடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் மேலும் கூடுதலான தடைகளைக் கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது யுக்ரேனில் நடக்கும் போருக்கு நிதியளிக்க உதவுவதாகவும், இரானின் அணுசக்தி திட்டத்திற்கும், ஹமாஸ், ஹெஸ்பொலா மற்றும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் போன்ற குழுக்களுக்குச் செல்கிறது என்றும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் ஆகியவை நம்புகின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)