வி.கே.பாண்டியன் ஒடிஷா அரசியலில் இருந்து விலகியது ஏன்? அவர் பேசியது என்ன? -காணொளி

காணொளிக் குறிப்பு, வி.கே.பாண்டியன் அரசியலில் இருந்து விலகியது ஏன்? அவர் பேசியது என்ன? -காணொளி
வி.கே.பாண்டியன் ஒடிஷா அரசியலில் இருந்து விலகியது ஏன்? அவர் பேசியது என்ன? -காணொளி

ஒடிஷாவில் 5 முறை முதல்வரான நவீன் பட்நாயக்கின் நிழலாக செயல்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே.பாண்டியன் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தொடர் வெற்றிகளைப் பெற்று வந்த நவீன் பட்நாயக் முதன் முறையாக இந்த தேர்தலில் தோற்றதற்கு இவரும் ஒரு காரணம் என்று மாநில அரசியலில் பேசப்பட்டு வரும் நிலையில், இந்த திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

"தீவிர அரசியலில் இருந்து விலகுவது என்று தீர்மானித்துள்ளேன். இந்த பயணத்தில் யாரையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தேர்தலில் எனக்கு எதிராக கடைபிடிக்கப்பட்ட பிரசார உத்தியும் பிஜூ ஜனதா தளத்தின் தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தால் அதற்காக வருந்துகிறேன்." என்று வி.கே.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

ஒடிஷாவில் தொடர்ந்து ஐந்து தேர்தல்களில் வெற்றி பெற்ற பிஜு ஜனதா தளம் (பிஜேடி) தேர்தலில் தோல்வியடையும், மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று தேர்தல் பார்வையாளர்களோ அல்லது தேர்தல் ஆய்வு அமைப்புகளோ நினைக்கவில்லை.

கடந்த முறை போலவே இம்முறையும் மாநிலத்தில் வாக்குகள் பிரியும் என்றும், இதன் மூலம் மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் என்றும், ஆனால் சட்டசபைத் தேர்தலில் பிஜேடி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்பதும் தான் அனைவரின் ஊகமாக இருந்தது.

வி.கே.பாண்டியன் ஒடிஷா அரசியலில் இருந்து விலகியது ஏன்

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)