காணொளி: 'நீங்கள் ராஜினாமா செய்தீர்களா?' - அமித் ஷாவை கேள்வி எழுப்பிய எம்.பி

காணொளிக் குறிப்பு, கே.சி.வேணுகோபால் vs அமித் ஷா
காணொளி: 'நீங்கள் ராஜினாமா செய்தீர்களா?' - அமித் ஷாவை கேள்வி எழுப்பிய எம்.பி

கைது செய்யப்பட்ட பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களை பதவிநீக்கம் செய்யும் '130வது அரசியலமைப்பு திருத்த மசோதா 2025' மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது "இந்த மசோதா அரசியலில் தார்மீகத்தை கொண்டுவருதற்காக என பாஜகவினர் கூறுகின்றனர். குஜராத் உள்துறை அமைச்சராக இருந்தபோது கைது செய்யப்பட்ட அமித்ஷா தனது தார்மீக பொறுப்பு எடுத்துக்கொண்டாரா?" என காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமித் ஷா,"நான் கைது செய்யப்படுவதற்கு முன்பு தார்மீக அடிப்படையில் பதவியை ராஜினாமா செய்தேன்" என பதிலளித்தார்.

5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத்தண்டனை கொண்ட குற்றச்சம்பவங்களில் தொடர்நது 30 நாட்களுக்கு சிறையில் அடைக்கப்பட்ட பிரதமர், முதலமைச்சர்கள் அல்லது அமைச்சர்கள் 31வது நாளில் இருந்து பதவிநீக்கம் செய்யப்படுவார்கள் என மசோதா கூறுகிறது.

இந்த மசோதா தற்போது நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு