காணொளி: டெல்லி கார் வெடிப்பு பற்றி பிரதமர் மோதி பேசியது என்ன?

காணொளிக் குறிப்பு, டெல்லி கார் வெடிப்பு - பிரதமர் மோதி பேசியது என்ன?
காணொளி: டெல்லி கார் வெடிப்பு பற்றி பிரதமர் மோதி பேசியது என்ன?

டெல்லியில் நேற்று கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. தற்போது பூடானில் உள்ள பிரதமர் மோது இது குறித்து பேசியுள்ளார்.

"மிகவும் கனத்த மனதுடன் இங்கு வந்திருக்கிறேன். நேற்று மாலை டெல்லியில் நடந்த பயங்கரமான சம்பவம் அனைவரது மனதையும் வருத்தமடைய செய்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரை புரிந்துகொள்கிறேன். இன்று ஒட்டுமொத்த நாடும் அவர்களுடன் துணை நிற்கிறது.

நான் நேற்று இரவு முழுவதும் இந்தச் சம்பவத்தின் விசாரணையில் ஈடுபட்டிருந்த அனைத்து முகமைகளையும், அனைத்து முக்கியமான நபர்களையும் தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டறிந்தேன்.

நமது விசாரணை அமைப்புகள், இந்த சதித்திட்டத்தின் ஆழம் வரை சென்று விசாரிக்கும். இதற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள். இதற்கு காரணமான அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்." என்று தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு