காணொளி: பாலத்தீனத்தை நாடாக அங்கீகரிப்பதால் என்ன மாற்றம் வரும்?
பாலத்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் உள்ளிட்ட வேறு சில நாடுகளும் வரவிருக்கும் நாட்களில் பாலத்தீனத்தை அங்கீகரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளன.
பாலத்தீனத்தை அங்கீகரிப்பது என்றால் என்ன, அது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தும்? இந்த கானொளியில் விளக்கமாக பார்க்கலாம்.
நடைமுறையில் பாலத்தீனம் என்ற நாடு இருக்கிறது அல்லது இல்லை என்றும் கூறலாம்.
பாலத்தீனத்திக்கு பெரிய சர்வதேச அங்கீகாரம் உள்ளது. அதே போல வெளிநாடுகளில் ராஜீய திட்டங்கள், ஒலிம்பிக் உட்பட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளும் உள்ளன.
ஆனால் இஸ்ரேலுடன் நீண்டகாலமாக நிலவும் மோதல் காரணமாக, பாலத்தீனத்துக்கு சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட எல்லைகளோ, தலைநகரமோ, ராணுவமோ இல்லை. 1990களில் ஏற்படுத்தப்பட்ட அமைதி ஒப்பந்தங்களை அடுத்து அமைக்கப்பட்ட பாலத்தீன அதிகாரசபை, நிலத்தையோ அல்லது மக்களையோ முழுமையாகக் கட்டுப்படுத்தவில்லை. இஸ்ரேல் ஆக்கிரமிப்பு சக்தியாக இருந்து வரும் காஸா பகுதி, பேரழிவு தரும் போரின் நடுவே உள்ளது.
குவாஸி ஸ்டேட் மாதிரியான அங்கீகாரம் அதாவது சர்வதேச சமூகத்தால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாத, அதே நேரம் சுதந்திர நாடு போல நடந்து கொள்ளும் அந்தஸ்து, தவிர்க்க முடியாத மற்றும் அடையாளப்பூர்வமாக மட்டுமே உள்ளது. இது வலுவான தார்மீக மற்றும் அரசியல் ஆதரவை பிரதிநிதித்துவப்படுத்தும். ஆனால் யாதார்த்தத்தில் பெரிய மாற்றம் இருக்காது. அதே நேரம் அடையாளப்பூர்வ அங்கீகாரம் என்பதும் வலுவானது.
பாலத்தீனத்தை யார் நாடாக அங்கீகரிக்கின்றனர்? ஏன் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் பாலத்தீனத்தை அங்கீகரிக்கின்றன?
முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



