மேக் அப் தொழிலை விட்டு குத்துச்சண்டைக்கு மாறிய ஆஸ்திரேலிய பெண்
ஆஸ்திரேலியா குத்துச்சண்டை வீராங்கனையான டினா ரஹிமி, ஹிஜாப் அணிந்து விளையாடும் முதல் குத்துச்சண்டை வீராங்கனை ஆவார். இவர், ஜூலை மாதம் பாரிஸில் நடக்கவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கிறார்.
ஆஸ்திரேலிய பிரஜையான இவருக்கு 27 வயதாகிறது. இரானில் பிறந்த இவரது தந்தை மல்யுத்தப் போட்டியின் மூலம் ஆஸ்திரேலியா வந்துள்ளார். அவர், மல்யுத்தத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இரானில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.
இதுகுறித்து பேசிய ரஹிமி,"நான் 21 வயதாக இருக்கும்போது, மேக் அப் போடுவதை வேலையாகச் செய்து வந்தேன். எனக்கு மேக் அப் போட்டுவிடுவது மிகவும் பிடிக்கும். என் தங்கைக்கும் என் நண்பர்களுக்கும் நான் தான் மேக் அப் போடுவேன். அதனால், நான் அதைத் தொழிலாகச் செய்யலாம் என நினைத்தேன், என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "அதே ஆண்டு நான் குத்துச்சண்டையும் பழக ஆரம்பித்தேன். ஆனால், குத்துச்சண்டையைப் பொறுத்தவரையில் நாம் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். கொஞ்சம் எடை குறைக்க வேண்டும். பின், எனக்கு குத்துச்சண்டை மீது அதிக ஆர்வம் வந்தது. அதனால், நான் மேக் அப் போடும் தொழிலை நிறுத்திவிட்டேன். எனக்கு குத்துச்சண்டையில் அதிகம் நேரம் செலவிட வேண்டும்," என்றார்.
தற்போது, காமன்வெல்த் போட்டிகளில் வென்றுள்ள ரஹிமி, ஜூலை மாதம் நடக்கவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஆஸ்திரேலியா சார்பில் பங்கேற்கிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



