காணொளி: வெனிசுவேலா அதிபருடன் சிறை பிடிக்கப்பட்ட அவரது மனைவி யார்?
காணொளி: வெனிசுவேலா அதிபருடன் சிறை பிடிக்கப்பட்ட அவரது மனைவி யார்?
அதிபர் மதுரோவுடன் சிறைபிடிக்கப்பட்ட அவரின் மனைவி சிலியா ப்ளோர்ஸ், வெனிசுவேலா அரசியலில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார். சில நேரங்களில் தனது கணவரை விட உயர்ந்த பதவிகளை வகித்துள்ளார்.
இவர் மறைந்த ஹ்யூகோ சாவேஸின் சட்டக் குழுவில் இடபெற்றிருந்தார்.
பின்னர் 2013 அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தின்போது சிலியாவை "முதல் போராளி" என மதுரோ குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்திற்கு தலைமை தாங்கிய முதல் பெண் இவர். பின்னர் அட்டர்னி ஜெனரலாகவும் பணியாற்றினார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



