பஞ்சாபில் விமரிசையாக கொண்டாடப்பட்ட சீக்கியர்களின் ‘ஹோலா மொஹல்லா’

காணொளிக் குறிப்பு, பஞ்சாபின் ஆனந்த்பூர் சாஹிப் நகரத்தில் ‘ஹோலா மொஹல்லா’ திருவிழா கொண்டாடப்படுகிறது.
பஞ்சாபில் விமரிசையாக கொண்டாடப்பட்ட சீக்கியர்களின் ‘ஹோலா மொஹல்லா’

பஞ்சாபின் ஆனந்த்பூர் சாஹிப் நகரத்தில் ஆண்டுதோறும் ‘ஹோலா மொஹல்லா’ எனும் சீக்கியத் திருவிழா கொண்டாடப்படுகிறது. மார்ச் 24 முதல் 26-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கும் இத்திருவிழாவிற்கு மக்கள் அதிகளவில் பங்கேற்கின்றனர்.

கட்கா (சீக்கிய தற்காப்பு கலை), குதிரை ஏற்றம் மற்றும் சீக்கியர்களின் பல கலைகளின் அரங்கேற்றத்தை இங்கே காணலாம்.

இந்த திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பாபா பல்பீர் சிங் பேசிய போது, “உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் இங்கு வருகிறார்கள். குரு கோவிந்த் சிங் 1699ஆம் ஆண்டில் கால்சா அமைப்பை தொடங்கினார்.

1700ஆம் ஆண்டில் முதல் ‘ஹோலா மொஹல்லா’ கொண்டாடப்பட்டது. நிகாங் வீரர்கள் அந்த பாரம்பரியத்தை இன்றும் பின்பற்றி வருகிறோம். கட்கா மற்றும் குதிரையேற்றப் போட்டிகளும் இங்கு நடைபெறும்” என்று கூறினார்.

ஹோலா மொஹல்லா திருவிழாவைக் காண வெளிநாட்டினர் பலர் பஞ்சாபிற்கு வருகிறார்கள்.

இங்கு வந்திருக்கும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மேக்ஸ் என்பவர் பேசிய போது, “நான் ஒரு புகைப்படக் கலைஞன், லண்டனில் இருந்து வருகிறேன். நான் இங்கு வருவது இதுவே முதல் முறை. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. புகைப்படங்களை எடுக்க மட்டுமல்லாது ஒரு புதிய அனுபவத்திற்காக வந்துள்ளேன்.

திருவிழாவின் முதல் நாள் அட்டகாசமாகத் தொடங்கியது. மக்கள் மிகவும் அன்பாக உபசரித்தார்கள். இங்கே இருப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது” என்று கூறினார்.

செய்தியாளர்: பிமல் சைனி

படத்தொகுப்பு: கென்ஸ்

சீக்கியர்களின் ‘ஹோலா மொஹல்லா’.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹோலா மொஹல்லாவில் நிகாங் வீரர்கள்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)