ஹிஜாப், முத்தலாக் பற்றிய இந்திய முஸ்லிம் பெண்களின் பார்வை - காணொளி

காணொளிக் குறிப்பு, ஹிஜாப், முத்தலாக் பற்றிய இந்திய முஸ்லிம் பெண்களின் பார்வை என்ன?
ஹிஜாப், முத்தலாக் பற்றிய இந்திய முஸ்லிம் பெண்களின் பார்வை - காணொளி

ஹிஜாப் மற்றும் முத்தலாக் – இஸ்லாத்தின் பிற்போக்கு அம்சங்கள் குறித்து கேள்வி எழுப்புவதற்காக பயன்படுத்தப்படும் இரண்டு முக்கிய விவகாரங்கள்

ராஞ்சியில் உள்ள கான்வென்ட் பள்ளியில் படித்த பிறகு, பரீரா டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அங்கு ஹிஜாப் அணிந்த சில பெண்களுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது.

ஒரு முஸ்லிம் என அடையாளம் காணப்பட்டால், தான் குறிவைக்கப்படலாம் என்கிற அச்சம் இருந்த போதிலும், பரீரா ஏன் ஹிஜாப் அணிய முடிவு செய்தார்? இந்தியாவில் முஸ்லிம் பெண்களின் வாழ்க்கை எப்படி மாறுகிறது?

 தன்னை ஒரு முஸ்லிமாக அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை என்ற குற்ற உணர்வு அவரிடம் இருந்தது. அதே நேரம், முஸ்லிம் என்ற அடையாளம் தாக்குதலுக்கு உள்ளாகுவதாகவும் அவர் உணர்ந்தார். எனவே பரீரா தனது மத அடையாளத்தை நோக்கி நெருக்கமாக செல்ல தொடங்கினார்.

ஹைதராபாத்தில் ஃபர்ஹீன் வாழும் பகுதியில் ஒரே தடவையில் மூன்று முறை தலாக் கூறி, விவாகரத்து கொடுப்பது சாதாரணமான விஷயம். ஃபர்ஹீன் திருமணம் செய்த 2019-ல் ஆண்டில் தான் ஒரே தடவையில் முத்தலாக் தருவது சட்டத்துக்கு புறம்பானதாக மாற்றப்பட்டது.

ஃபர்ஹீன் அடிக்கடி தன்னுடைய பிறந்த வீட்டுக்கு வரத் தொடங்கினார். இதேபோல், ஏதாவது மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் தனது கணவர் வீட்டுக்கும் அவர் பல முறை திரும்பி வந்திருக்கிறார். ஆனால் எதுவுமே மாறவில்லை. இறுதியாக , விவாகரத்து பெறுவது என அவர் முடிவு செய்தார்.

ஃபர்ஹீன் மட்டும் இல்லை. முத்தலாக் சட்டத்தை அமல்படுத்தியதால் உண்டான தாக்கம் குறித்து அரசாங்கம் எந்த தரவையும் வெளியிடவில்லை, ஆனால் மகளிர் உரிமைக் குழுவான ஷாஹீன், தற்போது தங்களுக்கு முத்தலாக் தொடர்பாக எவ்வித வழக்குகளும் வருவதில்லை என கூறுகிறது. அதற்கு பதிலாக மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என நினைக்கும் ஆண்கள் அவர்களை கைவிட்டு செல்கின்றனர். இதன் மூலம் வரதட்சனையை திருப்பி தருவது, ஜீவனாம்சம் கொடுப்பது போன்ற கடமைகளில் இருந்து அவர்கள் தப்பிக்கின்றனர். சில ஆண்கள் இரண்டாவது திருமணமும் செய்துகொள்கிறார்கள் ஆனால் பெண்களால் திருமணம் செய்து கொள்ளவும் முடிவதில்லை விவகாரத்து பெறவும் முடிவதில்லை.

பழமைவாதத்தில் இருந்து விடுதலை பெறுவதற்கு என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட சட்டம் ஃபர்ஹீனை விடுவிக்க உதவவில்லை.

வகுப்புவாத ஒடுக்குதலுக்கு மத்தியில், ஹிஜாப் அணிய வேண்டும் என்ற பரீராவின் முடிவு பழமைவாதம் தொடர்பானது அல்ல. அது அவரது முஸ்லிம் அடையாளத்துக்கான போராட்டம்.

அப்படியானால் இந்த சமூகமும் அரசியலும் எதை நோக்கி செல்வதாக பரீரா உணர்கிறார்?

ஹிஜாப், முத்தலாக்

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)