காணொளி: திடீரென கழன்ற விமான சக்கரம்

குஜராத் மாநிலம் கண்ட்லா விமான நிலையத்திலிருந்து மும்பை நோக்கி 72 பயணிகளுடன் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் ஒரு சக்கரம் கழன்றது. இந்த சம்பவத்தை விமானத்தில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்தார்.

எனினும், தொடர்ந்து மும்பை நோக்கி சென்ற விமானம் அங்கு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். விமான சக்கரம் கழன்ற தகவல் கிடைத்ததும் முன்னெச்சரிக்கையாக மும்பை விமான நிலையத்தில் முழு அவசரநிலை அமல்படுத்தப்பட்டது

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு