தினமும் எவ்வளவு உப்பை எடுத்துக் கொள்வது உடல்நலத்திற்கு நல்லது?
அதிகளவில் உப்பை எடுத்துக் கொள்வது இதய நோய், பக்கவாதம் போன்ற ஆபத்தை அதிகரிக்கும்.
உலக நாடுகள் தங்களது மக்கள் உப்பை எடுத்துக் கொள்ளும் அளவை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. அதிகளவில் உப்பை எடுத்துக் கொள்வது இதய நோய், பக்கவாதம் போன்ற ஆபத்தை அதிகரிக்கும் என்றும் அது எச்சரித்துள்ளது.
'சோடியம் பயன்பாடு குறைப்பு கொள்கைகள்' மூலம் 2030ஆம் ஆண்டிற்குள் 70 லட்சம் மக்களை இறப்பில் இருந்து காப்பாற்ற முடியும்.
ஆனால் தற்போது பிரேசில், சிலி, செக் குடியரசு, லித்துவானியா, மலேசியா, மெக்சிகோ, சௌதி அரேபியா, ஸ்பெயின், உருகுவே ஆகிய 9 நாடுகளிடம் மட்டுமே சோடியம் உட்கொள்வதைக் குறைக்க பரிந்துரைக்கப்பட்ட கொள்கைகளின் விரிவான தொகுப்பு உள்ளது.
"ஒர் ஆரோக்கியமான நபர் தினசரி 4 கிராம் உப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்" என்கிறார் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணரான மருத்துவர் மீனாட்சி பஜாஜ்.

பட மூலாதாரம், Getty Images
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



