ஆந்திராவில் மூன்று அடுக்கு மாடி விடுதி இடிந்து தரைமட்டம் - தங்கியவர்கள் என்ன ஆனார்கள்?

காணொளிக் குறிப்பு, சரிந்து விழுந்த கட்டடத்தில் ஆட்கள் யாரும் இல்லாததால், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
ஆந்திராவில் மூன்று அடுக்கு மாடி விடுதி இடிந்து தரைமட்டம் - தங்கியவர்கள் என்ன ஆனார்கள்?

ஆந்திராவில் கட்டுமானப் பணிக்கு குழி தோண்டியதால் அருகில் இருந்த மூன்று மாடி கட்டடம் இடிந்து தரைமட்டமானது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்ட ஸ்ரீசைலம் சாலையில் தனியார் விடுதி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த விடுதிக்கு அருகே கட்டுமான பணிக்காக சில நாட்களுக்கு முன் குழி தோண்டியுள்ளனர்.

இதையடுத்து, விடுதிக் கட்டடத்தில் விரிசல் ஏற்படத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில், மூன்று மாடிகள் கொண்ட இந்த தனியார் விடுதி ஞாயிற்றுக்கிழமை காலை இடிந்து விழுந்தது.

கட்டடத்தில் விரிசல் அதிகமாக தொடங்கியதுமே, அங்கிருந்த அனைவரும் வெளியேறியதால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

முழு விவரம் காணொளியில்...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)