விஜயகாந்த் உடலைக் கண்டு கதறியழுத தொண்டர்கள்

காணொளிக் குறிப்பு, விஜயகாந்த் காலமானார்
விஜயகாந்த் உடலைக் கண்டு கதறியழுத தொண்டர்கள்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நிமோனியாவுக்காக அனுமதிக்கப்பட்ட அவர், வென்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவர்களின் தீவிர முயற்சியும் பலனளிக்காமல் அவர் இறந்துவிட்டார்" என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் தேமுதிக நிர்வாகிகளும் தொண்டர்களும் விஜயகாந்தின் கட்சி அலுவலகத்தில் குவிந்து வருகிறார்கள். விஜயகாந்தின் மறைவைக் கேட்டு தொண்டர்கள் கதறி அழுதனர்.

கதறியழுத தொண்டர்கள்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)