ஆஸ்கர் இறுதி பரிந்துரை பட்டியலில் முதுமலை யானை பராமரிப்பு தம்பதியின் கதை 

நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதியின் கதையைக் கொண்ட தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற குறு ஆவணப்படம் ஆஸ்கருக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

முதுமலை காப்பகத்தில் யானை பராமரிப்பாளர்களாகப் பணியாற்றும் காட்டு நாயக்கர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியைப் பற்றியது இந்த ஆவணப்படம்.

தாயைப் பிரிந்து குட்டி யானைகளை இந்தத் தம்பதி பராமரித்து வருகின்றனர். யானைகளுக்கும் இவர்களுக்கும் இடையேயான உணர்வுபூர்வமான கதையைக் கொண்டது தி எலிபெண்ட் விஸ்பரரஸ் ஆவணப்படம்.

நெட்பிளிக்ஸில் வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படத்தை கார்த்தி கொன்சால்வ்ஸ் இயக்கியிருக்கிறார். குனீத்மோங்கா தயாரித்திருக்கிறார். 

“இன்றைய ஆஸ்கர் பரிந்துரை அன்பு கொண்ட கதைகள் மற்றும் ஒரு பெரிய தொலைக்குப் பார்வைக்கு சளைக்காமல் தங்களை அர்ப்பணிக்கும் நபர்கள் மீதான எனது நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. அப்பாவித்தனமும் நேர்மையும்தான் எல்லைகளைத் தாண்டி, யானை விஸ்பரர்களை ஊட்டி என்ற சிறிய நகரத்திலிருந்து சினிமாவின் மிகப்பெரிய மேடைக்கு பயணிக்க வைத்தது” என்று தனது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பதிவில் குனீத்மோங்கா குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: