காணொளி: 'அமெரிக்காவின் அழுத்தத்தால் குழப்பத்தில் உள்ளோம்' - ஜெய்சங்கர் கருத்து

காணொளிக் குறிப்பு, அமெரிக்காவின் அழுத்தத்தால் குழப்பத்தில் உள்ளோம் - ஜெய்சங்கர் கருத்து
காணொளி: 'அமெரிக்காவின் அழுத்தத்தால் குழப்பத்தில் உள்ளோம்' - ஜெய்சங்கர் கருத்து

அமெரிக்காவின் அழுத்தத்தால் குழப்பமாக உள்ளதாக, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தியா, ரஷ்ய எண்ணெய் வாங்குவது குறித்த அமெரிக்காவின் கருத்து பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அந்த கேள்வியில், "வெள்ளை மாளிகையின் வர்த்தக மற்றும் பொருளாதாரா ஆலோசகர் பீட்டர் நவர்ரோ சமீபத்தில் கூறுகையில், 'ரஷ்ய எண்ணெயை இந்தியா வாங்குவது யுக்ரேனில் நடக்கும் மோதலுக்கு நிதி உதவியாக உள்ளது. எனவே, இந்தியா வேறு மாதிரி நடந்துகொள்ள வேண்டும்' என கூறியிருந்தார். இதுபோன்ற கருத்துகள் மூலம் அமெரிக்கா சாதிக்க நினைப்பது என்னவென்று நினைக்கிறீர்கள்? இதுபோன்ற அழுத்தம் நம் இருநாடுகள் இடையேயான உறவை பலவீனமாக்கும் முயற்சியா? அல்லது அமெரிக்கா, இந்தியாவை தங்களுக்கு சாதகமான விதிமுறைகள் கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட கட்டாயப்படுத்துகிறதா?" என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், "ரஷ்ய எண்ணெயை அதிகமாக வாங்குவது நாங்கள் அல்ல. அது சீனா. ரஷ்யாவிடம் இருந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை அதிகம் வாங்குவதும் நாங்கள் அல்ல. அது, ஐரோப்பிய ஒன்றியம் என நினைக்கிறேன். 2022-க்கு பிறகு ரஷ்யா உடன் அதிகளவில் வர்த்தகம் உயர்ந்துள்ள நாடும் நாங்கள் அல்ல.

அமெரிக்கா கூறியதை போல உலக எரிசக்தி சந்தையில் நிலைத்தன்மை கொண்டு வர ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது உட்பட அனைத்தையும் செய்கிறோம். அதேபோல, அமெரிக்காவிடம் இருந்தும் எண்ணெய் வாங்குகிறோம். அந்த அளவும் உயர்ந்துள்ளது. உண்மையில், நீங்கள் கூறும் வாதத்தின் தர்க்கம் குறித்து நாங்கள் மிகவும் குழப்பத்தில் உள்ளோம்." என தெரிவித்தார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு