ஒடிஷா ரயில் விபத்தில் 261 பேர் பலி, 650 பேர் காயம் - நடந்தது என்ன?
ஒடிஷா ரயில் விபத்தில் 261 பேர் பலி, 650 பேர் காயம் - நடந்தது என்ன?
ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே நேரிட்ட கோர ரயில் விபத்து இந்தியாவை மட்டுமல்ல, உலகையே உலுக்கியுள்ளது. ஹவுரா - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரயில்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டதில் 261 பேர் உயிரிழந்துள்ளனர், 650 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
காயங்களுடன் மீட்கப்பட்ட பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். ''இது இந்திய ரயில்வே வரலாற்றில் மூன்றாவது மோசமான விபத்து’’ என தேசிய பேரிடர் மீட்புப் படை தலைவர் அதுல் கர்வால் ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து சுருக்கமாக விவரிக்கிறது இந்தக் காணொளி.

பட மூலாதாரம், Getty Images
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



