30 ஆண்டுகளுக்கு பிறகு நகரும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை - என்ன மாற்றம் நிகழும்?
30 ஆண்டுகளுக்கு பிறகு நகரும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை - என்ன மாற்றம் நிகழும்?
30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடலில் தரைதட்டி நின்றிருந்த உலகின் மிகப்பெரிய பனிப்பாறை இப்போது நகரத் துவங்கியிருக்கிறது.
A23a என்று அழைக்கப்படும் இந்தப் பனிப்பாறை, 1986-இல் அண்டார்டிக் கடற்கரையிலிருந்து பிரிந்தது. ஆனால் அது விரைவாக வெட்டல் கடலில் தரைதட்டியது.,அடிப்படையில், ஒரு பனித் தீவாக மாறியது.
கிட்டத்தட்ட 4,000சதுர கி.மீ. பரப்பளவுகொண்ட இந்தப் பனிப்பாறை, ஒருங்கிணைந்த லண்டன் நகரத்தைவிட இரண்டு மடங்கு பெரியது. சென்னையைப் போல 4 மடங்கு என்று கூறலாம்.
கடந்த ஆண்டு அது வேகமாக நகரத் துவங்கியது. இப்போது அது அண்டார்டிக் கடற்பரப்பைக் கடக்கவிருக்கிறது.

பட மூலாதாரம், CPL PHIL DYE RAF / CROWN COPYRIGHT
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



