உத்தராகண்ட்: சில மீட்டர் தொலைவில் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் - எப்போது மீட்கப்படுவார்கள்?
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்தில் சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்பதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.
இன்னும் சில மீட்டர் தொலைவில் தொழிலாளர்கள் இருப்பதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்படும் தொழிலாளர்களுக்காக சின்னாசூரில் உள்ள சமுதாய சுகாதார நிலையத்தில் தற்காலிக மருத்துவமனை தயார் செய்யும் பணி வேகமாக நடந்து வருகிறது.
தேசிய பேரிடர் மீட்புக் குழு ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் சுரங்கப்பாதையில் உள்ளது. டஜன் கணக்கான ஆம்புலன்ஸ்கள் வெளியே தயாராக நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் மீட்கப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்ல முடியும். சுரங்கப்பாதையில் இன்னும் 12 மீட்டர் துளையிடும் பணி மீதமுள்ளது மற்றும் விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



