காணொளி: மதுபோதையில் போலீசாரிடம் பாம்பை காட்டி மிரட்டிய நபர்

காணொளிக் குறிப்பு, மதுபோதையில் போலீசாரிடம் பாம்பை காட்டி மிரட்டிய நபர்
காணொளி: மதுபோதையில் போலீசாரிடம் பாம்பை காட்டி மிரட்டிய நபர்

தெலங்கானாவில் மதுபோதையில் ஆட்டோ ஒட்டி வந்த நபரை போலீசார் தடுத்த நிறுத்தியபோது அவர் ஆட்டோவுக்குள் வைத்திருந்த பாம்பை எடுத்து போலீசார் மீது போடுவது போல மிரட்டிய சம்பவம் நடந்துள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள சந்திராயானகுட்டா பகுதியில் ஜனவரி 3-ம் தேதி மதுபோதையில் வாகனம் ஒட்டி வந்த ஆட்டோ ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து, அவரது ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து அவர் பாம்பை காண்பித்து மிரட்டிய நிலையில், சந்திராயானகுட்டா போலீசார் ஆட்டோ ஓட்டுனரை கைது செய்தனர்.

இதனையடுத்து, அந்நபர் காவல்துறையிடம் மன்னிப்பு கோரினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு