விதைப் பந்துகள் மூலம் காடுகள் மீட்டுருவாக்கம் - இந்தியரின் முயற்சிக்கு கென்யாவில் பாராட்டு
இந்த மாணவர்கள் விதைப் பந்துகளை தயாரிக்கின்றனர். இவர்கள் தொலைதூரம் எறியும் விதைப் பந்துகள் பின்னர் மரங்களாக வளர்கின்றன.
"விதைப்பந்துகளை தயாரித்து நிலத்தில் எறியும் ராகேஷ் குமார் மூலம்தான் இந்த யோசனை வந்தது. அவரை குறித்து கட்டுரை வாயிலாக அறிந்தேன்" என்கிறார் மானவர் ஜதீன்.
பஞ்சாபின் நுர்பூர் கிராமத்தில் ராகேஷ், விதைப்புத் திட்டத்தைத் தொடங்கினார். விதைப் பந்துகளை யாரும் செல்ல முடியாத மலைப் பகுதிகளில் எறிவார். காடு மீட்டுருவாக்கத்தில் ஈடுபடுபவர்களுக்கும் அவற்றை வழங்குவார்.
யாரும் செல்ல முடியாத இடத்திற்கு விதைப்பந்துகள் தூக்கி எறியப்படுகின்றன. 'சீட்பால்ஸ் கென்யா' எனும் ஆப்பிரிக்கக் குழுவிடமிருந்து இவர் ஊக்கம் பெற்றதாகக் கூறுகிறார். இவரது முயற்சி கென்யாவில் பாராட்டைப் பெற்றுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



