எதிரி நாடுகளைச் சமாளிக்க இந்தியா களமிறக்கிய அதிநவீன போர்க் கப்பலில் என்ன இருக்கிறது?

காணொளிக் குறிப்பு,
எதிரி நாடுகளைச் சமாளிக்க இந்தியா களமிறக்கிய அதிநவீன போர்க் கப்பலில் என்ன இருக்கிறது?

எதிரியின் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிராக, தன்னுடைய நகரங்கள், துறைமுகங்கள் மற்றும் முக்கிய நிர்மாணங்களை பாதுகாக்க ஒரு நாட்டின் கடற்படைக்கு பல்வேறு தேர்வுகள் இருக்கும். அந்த வகையில், இந்திய கடற்படையின் சமீபத்திய தேர்வுதான் ஐ.என்.எஸ் அர்னாலா.

இது இந்திய கடற்படையின் முதல் "அடுத்த தலைமுறை, ஆழமில்லா நீரில் செயல்படக்கூடிய நீர்மூழ்கிக் கப்பல்". அதாவது ஆழம் குறைந்த கடல் பகுதிகளிலும் இது திறமையாக இயங்கக்கூடியது.

இந்த போர்க் கப்பலைப் பார்வையிடவும் அது தொடர்பாக செய்தி வெளியிடவும் இந்திய கடற்படை பிபிசிக்கு அனுமதி வழங்கியது.

அதில் என்ன இருக்கிறது? விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு