"புத்தகப் பையுடன் குழந்தை" - இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு
யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில், ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி, 33 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள சித்துப்பாத்தி மயானத்தின் அருகே மூன்றாம் கட்டமாக இந்த அகழாய்வு பணிகள் நடத்தப்பட்டன.
இங்கு, ஒரு புத்தகப்பை மற்றும் குழந்தை உடையதாக சந்தேகிகப்படும் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் கூறுகிறது.
இந்த புத்தகப்பை பற்றி விசாரணை நடந்து வருவதாகவும், எனவே, கூடுதல் தகவல்களை வழங்க முடியாது எனவும் அகலாய்வு அதிகாரி பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்தார்.
யாழ்ப்பாண நீதிமன்ற மாஜிஸ்திரேட்டின் மேற்பார்வையில், பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழு அகழ்வுப் பணியில் ஈடுபட்டு வருகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Turk) இலங்கைக்கு வந்திருந்த போது, இந்த இடத்தைப் பார்வையிட்டு அஞ்சலி செலுத்தினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



