காணொளி: ரணில் விக்ரமசிங்க கைது - நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட காட்சி
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
அரசின் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், ரணில் விக்ரமசிங்க விசாரணைகளுக்காக ஆகஸ்ட் 22-ம் தேதியான இன்று அழைக்கப்பட்டிருந்தார்.
ரணில் விக்ரமசிங்கவிடம் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதியில் அரச நிதியை பயன்படுத்தி தனிப்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணத்தை மேற்கொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
தனது மனைவியான மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவுக்காக லண்டனுக்கு , அரச நிதியை பயன்படுத்தி விஜயம் மேற்கொண்டதாக கூறப்பட்டது.
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



