அமெரிக்கா: டிரம்ப், பைடன், ஒபாமா உள்பட 5 அதிபர்களுக்கு சமைத்த சமையல் கலைஞர்

காணொளிக் குறிப்பு,
அமெரிக்கா: டிரம்ப், பைடன், ஒபாமா உள்பட 5 அதிபர்களுக்கு சமைத்த சமையல் கலைஞர்

கிறிஸ்டெடா காமர்ஃபோர்ட் வெள்ளை மாளிகையில் பணியாற்றிய தலைமை சமையல் கலைஞர். அவர் 2005ஆம் ஆண்டில் இருந்து தலைமை சமையல் கலைஞராகப் பணியாற்றினார். இதுவரை ஐந்து அமெரிக்க அதிபர்களுக்கு அவர் உணவு சமைத்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த அவர், வெள்ளை மாளிகையில் தலைமை சமையl கலைஞராகப் பணியாற்றிய முதல் ஆசிய நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் பைடனுக்கும், ஒபாமாவுக்கும், டொனால்ட் டிரம்புக்கும் என்ன உணவுகள் பிடிக்கும் என்று கூறுகிறார். மேலும் உணவை ராஜ தந்திரத்தின் கருவி என்றும் கிறிஸ்டெடா அழைக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)