காணொளி: பாகிஸ்தானில் தனது குழந்தையுடன் டிரெக்கிங் செல்லும் தாய்

காணொளிக் குறிப்பு, 'இந்த அனுபவமே சிறந்தது' - குழந்தையுடன் டிரெக்கிங் செய்யும் தாய்
காணொளி: பாகிஸ்தானில் தனது குழந்தையுடன் டிரெக்கிங் செல்லும் தாய்

பாகிஸ்தானை சேர்ந்தவர் ஸுபாரியா ஜான், ஒரு குழந்தைக்கு தாயான இவர் டிரெக்கிங் செல்வதில் ஆர்வம் கொண்டவர். குழந்தையை வெளியில் அழைத்துச் செல்வது குறித்தும் பயம் கொண்டிருக்கும் சமூகத்தில், இஸ்லாமாபாத்தை சேர்ந்த கல்வியாளரான இவர், தன் மகனை தன்னுடைய டிரெக்கிங் பயணங்களுக்கு அழைத்து செல்கிறார்.

பிறந்து சில வாரங்கள் ஆனதிலிருந்தே அவர் இவ்வாறு அழைத்துச் செல்கிறார். இந்த காணொளியில், திரைகளை விட தன் மகன் பயணம், இயற்கையுடன் இயைந்து வாழ்தல், புதிய மனிதர்களை சந்தித்தல் ஆகியவற்றின் மூலம் அதிகம் கற்பதாக கூறுகிறார் இவர்.

செய்தியாளர்: ஹசன் அப்பாஸ், பிபிசி உருது

ஒளிப்பதிவு: காஷிஃப் பாஜ்வா, பிபிசி உருது

படத்தொகுப்பு: அஃப்தாப் கான், பிபிசி உருது

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு