காணொளி: சட்டவிரோதமாக குப்பை கொட்ட நாய்க்கு பயிற்சி அளித்த உரிமையாளர்
காணொளி: சட்டவிரோதமாக குப்பை கொட்ட நாய்க்கு பயிற்சி அளித்த உரிமையாளர்
இத்தாலியில் சட்டவிரோதமாக குப்பை கொட்ட நாய்க்கு உரிமையாளர் பயிற்சி அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சிசிலியில் இது நடந்திருக்கிறது. நாய் தொடர்ந்து இரண்டு நாட்கள் குப்பை போடுவது பதிவாகி உள்ளது.
தான் கேமராவில் பதிவாவதை தவிர்க்க உரிமையாளர் நாய்க்கு பயிற்சி அளித்ததாக போலிஸார் கூறுகின்றனர்.
இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் எதுவும் கூறவில்லை. அனுமதிக்கப்படாத இடங்களில் குப்பை கொட்டுவது இத்தாலியில் சட்டவிரோதம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



