முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஷூவை வீசியவர் இப்போது என்ன செய்கிறார்?
கடந்த 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், இந்த இராக் நாட்டு பத்திரிகையாளர் ஜார்ஜ் புஷ் மீது தனது ஷூக்களை வீசினார். 2003 முதல் இராக்கிலிருந்த அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளின் படைகளும் சதாம் உசேனின் ஆட்சியைக் கவிழ்த்தன.
பின்னர் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ், அமெரிக்க படைகளைத் திரும்பப் பெறுவதற்கான உடன்படிக்கையை எட்ட அப்போதைய இராக் பிரதமர் நூரி அல்-மாலிகியைச் சந்தித்தார்.
பாதுகாவலர்களால் தாக்கப்பட்ட பிறகு, முன்டதார் இரண்டு முறை சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறுகிறார். ஆனால், அதை இராக் ராணுவம் மறுக்கிறது.
மார்ச் 2009இல், புதிய அமெரிக்க அதிபரான பராக் ஒபாமா இராக்கில் உள்ள அமெரிக்க படைகளை முழுமையாக திரும்பப் பெறுவதாக அறிவித்த உடன், முன்டதாருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, செப்டம்பர் 2009இல் விடுவிக்கப்பட்டார்.
ஆனால் அவர் எந்த காரணத்திற்காக முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மீது தனது காலணிகளை எறிந்தார்? அவரது தற்போதைய நிலை என்ன?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



