அமேசான் காட்டுக்குள் சிக்கிய 4 குழந்தைகள் 40 நாட்களாக உயிர் பிழைத்தது எப்படி?

காணொளிக் குறிப்பு, அமேசான் காட்டுக்குள் சிக்கிய 4 குழந்தைகள் 40 நாட்களாக உயிர் பிழைத்தது எப்படி?
அமேசான் காட்டுக்குள் சிக்கிய 4 குழந்தைகள் 40 நாட்களாக உயிர் பிழைத்தது எப்படி?

"அதிசயம்... அதிசயம்... அதிசயம்..."

கொலம்பியா நாட்டுக்குள் பரவிக்கிடக்கும் அமேசான் காட்டின் மையப் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, அந்நாட்டு ராணுவத்தின் 'வயர்லெஸ்' கருவிகளில் ஒலித்த ஒரே சொல் இதுதான்.

அமேசான் காட்டில் உயிர்பிழைத்த 4 குழந்தைகள்

தென்னமெரிக்காவில் உள்ள பிரேசில், கொலம்பியா, பொலிவியா போன்ற 9 நாடுகளில் பரவிக் கிடக்கும் உலகின் மிகப் பெரிய, அடர்ந்த காடுதான் அமேசான்.

கொலம்பியாவின் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் எதையோ எதிர்பார்த்து பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது, அந்தக் காட்டுக்குள் 'வயர்லெஸ்' கருவிகளில் ஏற்பட்ட இரைச்சலைத் தாண்டி அந்த ஒரு சொல் மட்டும் தெளிவாக திரும்பத் திரும்பக் கேட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: