கால்பந்து உலகக்கோப்பை தொடக்க விழா: கண்ணைக் கவரும் படங்கள்

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு பிரமாண்டமான காற்றடைக்கப்பட்ட கோப்பையை ஆடுகளத்தில், ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை குரூப் ஏ-வின் முதல் போட்டி தொடங்கும் முன்பாக நடந்த கோலாகல தொடக்க நிகழ்வுகளில் காட்சிப்படுத்தப்பட்டது. முதல் போட்டி, கத்தார் மற்றும் எக்வடோருக்கு இடையே நவம்பர் 20ஆம் தேதியன்று நடைபெற்றது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. கே பாப் இசைக்குழு BTS இன் ஜங் குக் மற்றும் பிரபல நடிகர் மோர்கன் ஃப்ரீமேன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பையில் பிரபல இசைக்குழு BTS இன் நட்சத்திர பாடகர் ஜங் குக் தனது புதிய பாடலான 'ட்ரீமர்ஸ்' மூலம் தொடக்க விழாவில் கலந்து கொண்டவர்களை ஆட வைத்தார்.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நவம்பர் 20ஆம் தேதியன்று, கத்தார் மற்றும் எக்வடோருக்கு இடையிலான குரூப் ஏ-வின் முதல் போட்டிக்கு முன்பாக கத்தார் ரசிகர்கள், அல் கோரில் அமைந்திருக்கும் அல் பேட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்வுகளைக் கண்டு ரசித்தனர்.
கத்தார் கால்பந்து உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குரூப் ஏ போட்டியின் தொடக்க விழாவின்போது, அல்பேட் ஸ்டேடியத்தில் முந்தைய கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளின் மஸ்காட் சின்னங்களோடு கலை நிகழ்ச்சியை அரங்கேற்றினர்.
கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குரூப் ஏ போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஃபிஃபா உலகக் கோப்பையின் பிரதியைச் சுற்றி வானவேடிக்கைகள் வெடித்தன.
கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போட்டியை நடத்தும் கத்தார் மற்றும் எக்வடோர் இடையேயான தொடக்க ஆட்டம், உலகக் கோப்பை தொடக்கவிழா நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு, இந்திய நேரப்படி நேற்று இரவு 9.30 மணிக்கு தொடங்கியது.
கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அல் பேட் ஸ்டேடியத்தில் கத்தார், எக்வடோருக்கு இடையிலான போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மைதானத்திற்கு வெளியே காணப்பட்ட அமிரி காவலர்கள். கத்தார் ஆயுதப் படைகளின் உயரடுக்கு ராணுவப் பாதுகாப்புப் பிரிவே, அமிரி காவலர்கள்.
கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தொடக்க விழாவின்போது, முந்தைய கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளுடைய மஸ்காட் சின்னங்களோடு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரபல நடிகர் மோர்கன் ஃப்ரீமேனும் தொடக்க விழாவில் பங்கேற்றார். அனைவரையும் இணைக்கும் நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் சகிப்புத்தன்மை என்ற செய்தியைக் கொடுத்து மக்களின் இதயங்களை வென்றார்.
கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை போட்டியின் தொடக்க விழாவில், லாயீப் எனப் பெயரிடப்பட்ட கத்தார் உலகக் கோப்பையின் அதிகாரபூர்வ சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.
கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஃபிஃபா உலகக் கோப்பை 2022ஆம் ஆண்டுக்கான குரூப் ஏ போட்டியில், கத்தார் மற்றும் ஈக்வடாருக்கு இடையிலான போட்டியின்போது அல் பேட் மைதானத்தில் இரு அணிகளும் அணிவகுத்து நின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: