'உதவ வந்தவர்களும் புதைந்துவிட்டனர்', எத்தியோப்பியா நிலச்சரிவுகள் குறித்து அந்நாட்டு மக்கள் கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு, எத்தியோப்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 250-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
'உதவ வந்தவர்களும் புதைந்துவிட்டனர்', எத்தியோப்பியா நிலச்சரிவுகள் குறித்து அந்நாட்டு மக்கள் கூறுவது என்ன?

எச்சரிக்கை: இந்தக் காணொளியில் உள்ள சில காட்சிகள் உங்களை சங்கடப்படுத்தலாம்.

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 250-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் அந்த நாட்டின் தெற்கு பகுதியில் நடந்தது.

தெற்கு எத்தியோப்பியாவின் பல பகுதிகள் வெள்ளம், நிலச்சரிவு போன்ற மோசமான வானிலை நிகழ்வுகளால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ள பகுதிகளாக ஐநா அமைப்பால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

தென் எத்தியோப்பியாவில் ஏற்பட்ட இரண்டு நிலச்சரிவுகள் பல கிராமங்களை அழித்துள்ளன. முதலில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து தகவல் தெரிந்து, பிற பகுதிகளில் இருந்த உதவ வந்தவர்களில் சிலர் இரண்டாவதாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி புதைந்ததாக கூறுகின்றனர் கிராமத்தினர்.

முழு விவரம் காணொளியில்.

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 250-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)