கௌதம் கம்பீர்: இந்திய அணி உலகக் கோப்பைகளை வெல்ல உதவியவர், பயிற்சியாளராக சாதிக்க முடியுமா? - காணொளி

காணொளிக் குறிப்பு, 2007, 2011 உலகக் கோப்பைத் தொடரில் தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதையும், தோனியை விமர்சித்தும் கம்பீர் பேசியிருந்தார்.
கௌதம் கம்பீர்: இந்திய அணி உலகக் கோப்பைகளை வெல்ல உதவியவர், பயிற்சியாளராக சாதிக்க முடியுமா? - காணொளி

கௌதம் கம்பீருக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை பிசிசிஐ வழங்கியுள்ளது. கம்பீர் பயிற்சியாளராகப் பதவி ஏற்கும் காலத்தில் இந்திய அணி 2025ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபி, டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2026இல் டி20 உலகக் கோப்பை, 2027இல் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர்களில் விளையாட உள்ளது.

கம்பீர் பதவிக்காலத்தில் தான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக ரோகித் சர்மாவும், டி20 அணிக்கு புதிய கேப்டனும் பணியாற்றப் போகிறார்கள். இவர்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பு கம்பீருக்கு இருக்கிறது.

அணிக்குள் சாதகமான சூழலை ஏற்படுத்துவதும், வீரர்களின் திறமையை மேம்படுத்துவதும் கம்பீருக்கு இருக்கும் முக்கியப் பிரச்னையாக இருக்கக்கூடும். மூத்த வீரர்களான ரோகித், விராட் கோலி போன்றவர்களை சமாளித்து, அணியை சமநிலைப்படுத்துவதும் கம்பீருக்கு பெரிய பணியாக இருக்கும்.

கம்பீர் எப்போதுமே வெளிப்படையாக பேசக்கூடியவர். அதிரடிக் கருத்துக்களை தெரிவிப்பவர். 2007, 2011 உலகக் கோப்பைத் தொடரில் தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதையும், தோனியை விமர்சித்தும் கம்பீர் பேசியிருந்தார். ஒரு பயிற்சியாளராக அவர் செய்யப்போவது என்ன?

மேலும் விவரம் காணொளியில்.

கௌதம் கம்பீர்

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)