பாலத்தீனம்: மருத்துவமனையே மயானம் ஆகிறதா? இஸ்ரேல் தாக்குதலால் உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி
காஸாவில் அல் ஷிஃபா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையில் தாக்குதலுக்கு பிறகு, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அங்குள்ள பச்சிளங் குழந்தைகளை இன்குபேட்டரில் வைப்பதற்கான வசதிகள் இல்லை. அங்குள்ள மருத்துவர் ஒருவர், மேலும் ஒரு குழந்தையை தாங்கள் இழந்து விட்டதாக ஆடியோ வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேல் அந்த மருத்துவமனைக்கு எரிபொருள் வழங்கியதாக வீடியோ வெளியிட்டது. அந்த வீடியோ உண்மையா என பிபிசியால் உறுதி செ்ய்ய முடியவில்லை. மேலும், அந்த மருத்துவமனையில் உள்ள குழந்தைகளை வேறு இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஆனால் எப்போது எப்படி என எந்த தகவலையும் இஸ்ரேல் தெரிவிக்கவில்லை.
மருத்துவமனை மீ்து தாக்குதலில் மயிரிழையில் உயிர் தப்பித்த தாய் ஒருவர் மருத்துவமனை கூட பாதுகாப்பாக இல்லை என கதறுகிறார். அவரது மகன் தாக்குதலில் மகன் காயமடைந்து விட்டதால், அவனை மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக விட்டுவிட்டு வந்ததாக கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



