7.5 கோடி ஆண்டுகளுக்கு முன் டைனோசரையே வேட்டையாடிய விலங்கு எது தெரியுமா?
ஏழரை கோடி ஆண்டுகள் பழமையான கோகோசோரஸ் (gorgosaurus) எனப்படும் இளம் ட்ரனோசரஸின் (tyrannosaur) எச்சங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில் சுவாரஸ்யமான தகவல் வெளியாகி இருக்கிறது.
75 மில்லியன் ஆண்டுகள் பழைய கோகோசோரஸ் (gorgosaurus) எனப்படும் இளம் ட்ரனோசரஸின் (tyrannosaur) எச்சங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்த போது அதன் விலா எலும்புகளுக்கு இடையில் மிகச் சிறிய டைனோசரின் கால் எலும்புகள் இருப்பது கண்டறியப்பட்டது.
அந்த இரண்டு கால்களும் சிட்டிப்ஸ் எனப்படும் சிறிய பறவை போன்ற டைனோசருக்கு சொந்தமானது. இளம் ட்ரனோசரான கோகோசோரஸ் எவ்வாறு வேட்டையாடி தங்கள் இரையைப் பாதியாகக் கடித்திருக்கும் என்பது பற்றிய நுண்மையான புரிதலை இது வழங்குகிறது.
மேலும் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் குறித்த புதிய தகவலையும் இந்த கண்டுபிடிப்பு வழங்கியுள்ளது.
முழு விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



