மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியது என்ன?
மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியது என்ன?

இந்தப் பதிவைப் பார்க்க ஜாவா ஸ்கிரிப்ட் உடன் கூடிய நவீன பிரௌசர் மற்றும் சீரான இணைய இணைப்பு தேவை.

முடிவுகள் இன்னும் வரவில்லை.
ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை
முடிவுகள் இன்னும் வரவில்லை.
அண்மைத் தகவலைப் பார்க்க பக்கத்தைப் புதுப்பிக்கவும்

மக்களின் இந்தத் தீர்ப்பு அரசியல் சாசனத்தைக் காப்பதற்கு உதவியிருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மக்கள் மோதியைப் புறக்கணித்து விட்டனர் என்றும் அவர் பேசினார்.

“அரசியலமைப்பு சட்டத்தைக் காப்பாற்றுவதே எங்களின் போராட்டமாக இருந்தது. மக்கள், கூட்டணி கட்சியினர், காங்கிரஸ் தலைவர்கள், கட்சி தொண்டர்கள் ஆகியோருக்கு மனதின் ஆழத்திலிருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் ராகுல் காந்தி.

மேலும், “பங்குச்சந்தையில் அதானி நிறுவன பங்குகளை நீங்கள் கவனிக்க வேண்டும். மோதியை மக்கள் அதானியுடன் நேரடியாக இணைத்துப் பார்க்கின்றனர். இருவருக்கும் ஊழல்களில் நேரடி உறவு உள்ளது. எங்களுக்கு நரேந்திர மோதி, அமித் ஷா வேண்டாம் என மக்கள் கூறுவதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன” என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)