உகாண்டாவில் தீவிரமடையும் ஊழலுக்கு எதிரான மக்களின் போராட்டம்
உகாண்டாவில் தீவிரமடையும் ஊழலுக்கு எதிரான மக்களின் போராட்டம்
“இது எங்கள் நாடு. எங்கள் எதிர்காலத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறோம்”, உகாண்டா நாட்டின் தலைநகர் கம்பாலாவில் கடந்த செவ்வாயன்று நடந்த ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் ஒலித்த மக்களின் குரல்கள் இவை.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 40 ஆண்டுகளாக உகாண்டா அதிபராக உள்ள முசவேனி, “நீங்கள் அனைவரும் நெருப்புடன் விளையாடுகிறீர்கள்” என போராடும் மக்களை எச்சரித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக கென்யாவில் அரசுக்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு உகாண்டா போராட்டத்தை நடத்துவதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
மேலும் விவரம் காணொளியில்.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



