உத்தரப் பிரதேசம்: ஹாத்ரஸ் சம்பவத்தின்போது மருத்துவ உதவி தயார் நிலையில் இருந்ததா? - காணொளி
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் நகரில், ஜூலை 2ஆம் தேதி நடந்த மத வழிபாட்டு நிகழ்ச்சியில் (சத்சங்), கூட்ட நெரிசலில் சிக்கி 120க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்
ஹாத்ரஸ் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது ஒரு சிறிய சுகாதார மையம். இங்கு தான் பாதிக்கப்பட்ட மக்கள் கொண்டு வரப்பட்டனர்.
இத்தகைய பெரிய கூட்டம் ஹாத்ரஸில் நடைபெறவுள்ளது குறித்து அங்குள்ள மருத்துவர்களுக்கு முன்னரே எவ்வித தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஒருவேளை அவர்களுக்கு உரிய தகவல் கிடைத்திருந்தால் அவர்கள் முன் ஏற்பாடோடு இருந்திருக்கலாம்.
நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கிய மாவட்ட நிர்வாகம் ஏன் இந்த சுகாதார நிலையத்திற்கு உரிய தகவலை முன்கூட்டியே அளிக்கவில்லை? லட்சக்கணக்கான மக்கள் கூடியிருக்கின்றனர். 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். சம்பவத்தின்போது மருத்துவ உதவிகள் தயார் நிலையில் இருந்ததா?
முழு விவரம் காணொளியில்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



