இஸ்ரேல் செல்ல 300 ஆண்டுகளாக காத்திருக்கும் ஆந்திராவில் வாழும் 'யூதர்கள்'
இஸ்ரேல் செல்ல 300 ஆண்டுகளாக காத்திருக்கும் ஆந்திராவில் வாழும் 'யூதர்கள்'
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நடந்து வரும் மோதலின் விளைவுகள் ஆந்திராவிலும் தெரிகிறது.
குண்டூர் மாவட்டத்தின் கொத்தரெட்டிபாலத்தில் வசிக்கும் 40 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்களை யூதர்கள் என்று கூறிக் கொள்கின்றனர்.
இவர்கள் தங்களை பெனே எப்ரைம் பழங்குடியினர் என்று அழைக்கின்றனர். இவர்கள் இஸ்ரேலில் இருந்து இங்கு வந்து குடியேறியதாகக் கூறப்படுகிறது.

இவர்கள் பெனே ஜேக்கப் ஜெப ஆலயத்தில் யூத பாரம்பரியத்தைப் பின்பற்றுகின்றனர். இங்கு யூதர்களின் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன, ஹீப்ரூ மொழி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



