பெண் பாடகர்களுக்கு 'உச்சஸ்தாயி' குரலில் சவால் விடும் இளைஞர்

காணொளிக் குறிப்பு, பெண் பாடகர்களுக்கு ‘high-pitch’ குரலில் சவால் விடும் இளைஞர் – வீடியோ
பெண் பாடகர்களுக்கு 'உச்சஸ்தாயி' குரலில் சவால் விடும் இளைஞர்

வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்த, 29 வயதாகும் சாமுவேல் மரிஞோ, உலகின் வெகு சில soprano பாடகர்களில் ஒருவர்.

அதிலும் மிக அரிதான ஆண் soprano பாடகர்.

Soprano என்பது மேற்பத்தியச் செவ்வியல் சங்கீதத்தில் அதி உச்சஸ்தாயியில் பாடுவதைக் குறிக்கும். இந்த ஸ்தாயியை பெண்களால்தான் அதிகமாக அடைய முடியும்.

பருவம் அடையும்போது ஆண்களுக்குச் சாதாரணமாகக் குரல் உடைவதுபோல சாமுவேலுக்கு நிகழவில்லை, அதனால் இவரது குரல் பெண் குரல் போல ஒலிக்கிறது.

இதனால் தனது பதின்ம வயதில் சாமுவேல் தனது பள்ளி நண்பர்களால் பல துன்புறுத்தல்களுக்கு ஆளானார்.

அதன்பிறகு, ஒரு மருத்துவரின் அறிவுரைப்படி ஓபராவில் பாடக் கற்றுக்கொண்டார்.

அதன்பிறகு நடந்தது என்ன?

அவரது கதையை அவரது குரலிலேயே கேளுங்கள்...

பாடகர், வெனிசுவேலா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: