லிபியாவில் வெள்ளப்பெருக்கு - உருக்குலைந்து போன 'டெர்னா' நகரம்

காணொளிக் குறிப்பு, லிபியாவில் வெள்ளப்பெருக்கு - உருக்குலைந்து போன 'டெர்னா' நகரம்
லிபியாவில் வெள்ளப்பெருக்கு - உருக்குலைந்து போன 'டெர்னா' நகரம்

லிபியாவை டேனியல் என்ற புயல் தாக்கியபின் இரண்டு அணைகள் உடைந்ததில் டெர்னா எனும் நகரமே உருத்தெரியாமல் அழிந்துள்ளது. கடலில் அடித்து வரும் உடல்கள், இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கி அழுகும் நிலையில் உள்ள உடல்கள், மொத்தமாக ஆயிரக்கணக்கில் அடக்கம் செய்யப்படும் உடல்கள் என திரும்பிய பக்கமெல்லாம் மரண ஓலம் ஒலிக்கிறது.

லிபியா வெள்ளத்தால் ஏற்பட்ட உயிழிப்புகளின் எண்ணிக்கை குறித்து முரண்பட்ட தகவல்கள் வந்து கொண்டிருந்தாலும் அங்கு தற்போதையை நிலையில் சுமார் 6000 பேரிலிருந்து 10 ஆயிரம் வரை உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நூற்றுக்கணக்கானோரை இன்னும் காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.

லிபியாவில் வெள்ளம்

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: