காணொளி: 'சிறுநீரை குடிக்க செய்தார்கள்'- தலித் முதியவர் சொல்வதென்ன?
எச்சரிக்கை: உள்ளடக்கம் சங்கடம் தரலாம்.
“அவர் ‘முதலில் குடி’ என்றார். என்னை (மூத்திரம்) குடிக்க வைத்தார்கள்.” என்கிறார் ராம்பால்.
உத்தர பிரதேசம் தலைநகர் லக்னோவிலிருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில் உள்ள ககோரியில் சீத்ளா மாதா கோவில் உள்ளது. கோவிலின் வளாகத்தில் தனக்கு இந்த சம்பவம் நடந்ததாக ராம்பால் கூறுகிறார். என்ன நடந்தது என்பதை அவரிடம் கேட்போம்.
“முன்பகுதியில் வராண்டா இருக்கிறது. அங்கு அமர்ந்திருந்தேன். எனக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. எழுந்திருக்க முடியவில்லை. பின் அங்கேயே சிறுநீர் கழித்துவிட்டேன். அவர் "நீ சிறுநீர் கழித்தாயா?" எனக் கேட்டார். நான் முதலில் மறுத்தேன். பிறகு ஆம் என்றேன். "அப்படியெனில் அதை குடித்து விடு" என்றார். முதலில் அதை செய்தேன், பிறகு தண்ணீர் ஊற்றினேன்.” என்கிறார் ராம்பால்.
ஆனால், “அவர் கூறுவது போன்ற எந்த நிகழ்வும் அங்கு நடக்கவில்லை. சிலர் அரசியல் பகை காரணமாக அங்கு அமைதியின்மையை உண்டாக்க முயற்சி செய்கிறார்கள்.” குற்றம் சாட்டப்பட்டவரின் சகோதரர் ராமகாந்த் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



