உலக தேநீர் தினம்: இந்தியாவுக்குள் தேநீர் எப்படி வந்தது தெரியுமா?
இன்று உலக தேநீர் தினம். சாப்பாடு இல்லாமல் கூட இருப்பேன், ஆனால் தேநீர் இல்லாமல் இருக்க முடியாது என்று சொல்லும் தேநீர் பிரியரா நீங்கள்?
இந்தியாவுக்குள் தேநீர் எப்படி வந்தது என்று உங்களுக்கு தெரியுமா?
சீனர்களிடையே தான் பல ஆயிரம் ஆண்டுகளாக தேநீர் பிரபலமான பானமாக இருந்துவருகிறது. அங்கே இருந்து மெல்ல மெல்ல உலகம் முழுக்க பரவத் தொடங்கியது.
பிரிட்டிஷ்காரர்களுக்கு தேநீர் என்றால் மிகவும் இஷ்டம். சீனர்களிடம் இருந்து பிரிட்டன் அதிகளவில் தேயிலையை வாங்கி வந்தது. மறுபுறம் சீனாவுக்கு பிரிட்டன் விற்கும் பொருள்களின் தேவை குறைவாக இருந்ததால், மிகப்பெரிய வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டது.
இதை சரி செய்ய, தேயிலை விதைகளை சீனாவில் இருந்து எடுத்துவந்து வேறு இடங்களில் பயிரிட பிரிட்டன் முடிவு செய்தது. அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் தான் இந்தியா. எனினும், பிரிட்டன் எடுத்த தொடக்க முயற்சிகள் தோல்வியடைந்தன. அதன் பிறகு என்ன நடந்தது?
முழு விவரம் காணொளியில்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



