உலகிலேயே இந்த மக்களுக்கு மட்டும் மிக மெதுவாக வயதாவது ஏன்? - காணொளி

காணொளிக் குறிப்பு, உலகிலேயே இந்த மக்களுக்கு மட்டும் மிக மெதுவாக வயதாவது ஏன்? - காணொளி
உலகிலேயே இந்த மக்களுக்கு மட்டும் மிக மெதுவாக வயதாவது ஏன்? - காணொளி

பொலிவியாவில் இருக்கும் அமேசான் காடுகளில் வசிக்கும் சிமானே இன மக்கள் மிகவும் அபூர்வமானவர்கள்.

வேட்டையாடுதல், தீவனம் தேடுதல், மற்றும் விவசாயம் போன்ற இயற்கையைச் சார்ந்த வாழ்க்கை முறையை வாழும் பூமியின் கடைசி மக்களில் அவர்களும் ஒருவர். ஆனால் அதைவிட ஒரு விஷயம் - அவர்களுக்கு மிக மெதுவாகவே வயதாகிறது.

இந்த இனக்குழுவில் இருக்கும் 80 வயதான பெண்களும் 40 வயதானவர்களைப் போல் தீவிர உடலுழைப்பில் ஈடுபடுகிறார்கள்.

முதுமையிலும் இவர்களது உடல் மற்றும் மன ஆரோக்கியம் நலிவதில்லை.

சமீபத்தில் இந்த இனக்குழுவின் ஒரு பெண் தனது 100-ஆவது பிறந்தநாளைப் பன்றிக்கறி விருந்துடன் கொண்டாடியிருக்கிறார்.

இவர்களது இந்த அரிதான குணாதிசயத்துக்கு என்ன காரணம்?

ஆய்வாளர்கள் சொல்வது என்ன? முழு தகவல்கள் காணொளியில்.

சிமானே மக்கள், பொலிவியா

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)