காணொளி: விரட்டிய வனத்துறையினரை திருப்பித் தாக்க வந்த யானை
காணொளி: விரட்டிய வனத்துறையினரை திருப்பித் தாக்க வந்த யானை
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் யானை-மனித மோதல் அதிகம் நிலவும் பகுதி. யானைகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களுக்குள் வந்து செல்வது சமீப நாட்களாக அதிகமாகியுள்ளது.
இந்த நிலையில் குடியிருப்பு பகுதி ஒன்றில் நுழைந்த யானையை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்ட முயன்றனர். அப்போது, யானை திடீரென ஆக்ரோஷத்துடன் திரும்பி வந்து வனத்துறையினரை தாக்க முற்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



