36 வயதினிலே... மகளை பயிற்சி மையத்திற்கு அழைத்துச் சென்ற தாய் குத்துச் சண்டையில் தங்கம் பெற்றது எப்படி?
36 வயதினிலே... மகளை பயிற்சி மையத்திற்கு அழைத்துச் சென்ற தாய் குத்துச் சண்டையில் தங்கம் பெற்றது எப்படி?
பஞ்சாபின் ஜிரா என்ற சிறிய நகரில் வசித்து வருகிறார் ஹர்ப்ரீத் கவுர். இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர் சமீபத்தில் மாநில அளவில் நடத்தப்பட்ட குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு தன்னுடைய மகளை குத்துச்சண்டை பயிற்சிக்கு அழைத்துச் சென்றார். நாளடைவில் அதன் மீது நாட்டம் கொண்ட அவர், குத்துச்சண்டை பயிற்சிகளை பெறத்துவங்கினார். மாவட்ட, மாநில அளவில் அவர் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.
இந்த பயணம் எப்படி சாத்தியமானது? முழு விபரமும் இந்த வீடியோவில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



