சிரியா: தலைநகர் டமாஸ்கஸ் கிளர்ச்சியாளர்கள் வசம் வந்தது எப்படி? என்ன நடந்தது?
சிரியாவின் அலெப்போ, ஹமா மற்றும் ஹோம்ஸ் நகரங்களைக் கைப்பற்றிய கிளர்ச்சிக்குழுக்கள் தற்போது தலைநகர் டமாஸ்கஸையும் கைப்பற்றியதாக அறிவித்துள்ளது.
சிரியா சுதந்திரம் அடைந்துவிட்டதாகவும் சர்வாதிகார அதிபர் அல் ஆசாத் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகவும்ம்கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
தனது விமானம் மூலம் டமாஸ்கஸில் இருந்து ஆசாத் புறப்பட்டுச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், அவர் நாட்டை விட்டு வெளியேறியதாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
அரசு நிர்வாகம் முன்னாள் பிரதமரின் கண்காணிப்பில் இருக்கும் என கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கிளர்ச்சியாளர்கள் இது தொடர்பாக அரசுத் தொலைக்காட்சியிலும் தோன்றி பேசினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



