பாரம்பரிய இசையை மெய்மறந்து ரசிக்கும் மாற்றுத் திறனாளி பூனை
பாரம்பரிய இசையை மெய்மறந்து ரசிக்கும் மாற்றுத் திறனாளி பூனை
பாரம்பரிய துருக்கி இசையை தியான நிலையில் கேட்கும் பூனையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பினர் கோக்டாஸ் என்பவர் மாற்றுத்திறனுடைய பூனையை மீட்டு வளர்த்தார்.
பாரம்பரிய பக்லாமா இசைக்கருவியை அவர் வாசிக்கும்போது கேசி என்ற இந்த பூனை அமைதியாக இருக்கிறது. தற்போது, இசையை கேட்க வேண்டும் என அடம்பிடிக்கும் கேசி, பிடித்த பாடல்களை இசைக்காதபோது கோபம் கொள்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



